Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, December 9, 2023

TET தேர்ச்சி பெறாததால் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு நிலைக்கு மீண்டும் அங்கீகாரம் - ஆசிரியர்கள் நிம்மதி !!!

டெட் தேர்ச்சி பெறாததால் நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு நிலை அங்கீகாரம் மீண்டும் வழங்கியதால் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அரசுப்பணியில் சேருவோருக்கு, அனுபவம் அடிப்படையில், தேர்வு நிலை, சிறப்பு நிலை அங்கீகராம் வழங்கி ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதன்படி, பள்ளிக்கல்வித்துறையில், 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள், தேர்வு நிலை அந்தஸ்து வழங்க வேண்டும்.ஆனால், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறாதோருக்கு, பதவி உயர்வு வழங்கக்கூடாதென, ஐகோர்ட் மதுரை கிளையில் வெளியான தீர்ப்பு அடிப்படையில், தேர்வு நிலை கருத்துரு, ஆசிரியர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில், கோர்ட் தீர்ப்பு அடிப்படையில், அரசாணை வெளியிடாத நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும், ஆசிரியர்களின் கருத்துருக்கள் திருப்பி அனுப்பியதை கண்டித்து, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், கடந்த செப்டம்பரில் போராட்டம் நடத்தப்பட்டது.

தொடர்ந்து இதுகுறித்து, கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட தேர்வு நிலை அங்கீகாரம் மீண்டும் வழங்கப்பட்டு வருவதால், ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல் இல்லாத நிலையில், கோவை மாவட்டத்தில் மட்டும், தேர்வு நிலை கருத்துரு நிறுத்தி வைத்து ஆசிரியர்கள் அலைகழிக்கப்பட்டனர். பலகட்ட போராட்டங்களுக்கு பின், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேறியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment