குரூப் 4 பதவிகளுக்கான மூலச்சன்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன.,3ம் தேதி நடைபெற உள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
குரூப் 4 இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டகக் காப்பாளார் மற்றும் தட்டச்சர் ஆகிய பதவிகளுக்கு இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன.,3ம் தேதி சென்னையிலுள்ள அரசுத் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை அரசு தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment