நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் |
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
விளக்கம்:
இரண்டொழுக்க பண்புகள் :1
பொன்மொழி :
கவலைகளை நினைத்து கண்ணீர் சிந்துவதை விட...இலட்சியத்தை நினைத்து உதிரம் சிந்துவது மேலானது . பகத்சிங்.
பொது அறிவு :
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
ஜனவரி 23
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள்
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். காங்கிரஸ் சனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா
நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்! |
நீதிக்கதை
பகைவனுக்கு அருள்வாய்
ஒரு கழுகைப் பிடித்த ஒரு வேடன் அதன் இறகுகளை வெட்டி விட்டுக் கூண்டில் பிற பறவைகளுடன் அடைத்து வளர்த்து வந்தான். அதனால் அந்தக் கழுகு மிக வருந்திக் கொண்டிருந்தது.
அடுத்த வீட்டுக்காரன் அந்தக் கழுகை விலை கொடுத்து வாங்கினான். அவன் இறகுகளை வெட்டாமல் வளர விட்டான். அதனால் அது பறக்க முடிந்தது.
அப்படிப் பறந்து சென்ற அந்தக் கழுகு ஒரு முயலின் மீது பாய்ந்து அதைத் தன்னை வளர்ப்பவனிடம் தூக்கிக் கொண்டு வந்தது. அதைப் பார்த்து ஒரு நரி, "நீ அதை இந்த ஆளுக்குக் கொடுப்பதால் உனக்கு ஒரு புண்ணியமும் இல்லை. நீ இதை, முதலில் உன்னைப் பிடித்து இறகுகளை வெட்டினானே, அந்த ஆளுக்குக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவன் உன் மேல் கோபப்படாமல் இருப்பான். இல்லையென்றால் மீண்டும் அவன் உன்னைப் பிடித்து இரண்டாவது முறையாக உன்
இறகுகளை வெட்டி விடுவான்" என்றது.
நீதி : நமக்கு நல்லது செய்த நண்பர்களுக்குத் திரும்ப நல்லது செய்து நட்பை வளர்த்துக் கொள்வதைக் காட்டிலும் நமது பகைவர்களுக்கு நல்லது செய்து அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதில் கவனம் காட்ட வேண்டும்.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment