Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 23, 2024

மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களுக்கு ரூ.75000 வரை தனியார் நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை

பெங்களூரை சார்ந்த தனியார் நிறுவனம் (SAROJINI DAMODARAN FOUNDATION) மூலம் கல்வி உதவித்தொகை பெறுதல்

2023–2024 ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு கல்லூரி கல்வி பயிலும் தமிழ்நாட்டை சார்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் கல்வி உதவித்தொகையானது சரோஜினி தாமோதரன் நிறுவனம் மூலம் வழங்கிடும் வகையில் கீழ்காணும் விவரங்களின் அடிப்படையில் அறிவிப்பு பெறப்பட்டுள்ளது.

கல்வி

இக்கல்வி உதவித்தொகையானது ஆண்டு ஒன்றுக்கு ரூ.10,000/- முதல் ரூ.75,000/-வரை தகுதிக்கேற்ப வழங்கப்படுகிறது. இவ்வுதவித்தொகையானது மாற்றுத் திறனாளி மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் நான்கு லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வி உதவித்தொகை பெற கீழ்காணும் தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

> அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் 12ஆம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

தற்போது கல்வி ஆண்டில் (2023-2024) முதலாம் ஆண்டு கல்லூரியில் பயின்று வருபவராக இருத்தல் வேண்டும்.

> 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, இதில் குறைந்தபட்சம் 60% சதவீதம் பெற்றிருத்தல் வேண்டும்.

பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 4 லட்சத்திற்கு கீழ் இருத்தல் வேண்டும்.

மாற்றுத்திறன் சதவீதமானது 40% மேல் இருத்தல் வேண்டும்.

மேற்காணும் தகுதிகள் பெற்றிருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் 31.01.2024-க்குள் www.vidyadhan.org என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கலாகிறது.

மேலும், இக்கல்வி உதவித்தொகை குறித்தான விபரங்களுக்கு கீழ்காணும் இணையதளம் மற்றும் முகவரியை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

vable@sdfoundationindia.com

contact 9663517131

SAROJINI DAMODARAN FOUNDATION

(Reg NO.273-99-2000)

No. 383, 42" Cross, 9th Main, 5th Block, Jayanagar, Bangalore - 560 041

Ph 080-4915 5900 / www.sdfoundationindia.com


No comments:

Post a Comment