Sunday, January 7, 2024

9 மற்றும் 10-ம் வகுப்பு பிசி, எம்பிசி மாணவிகளுக்கு உதவித்தொகை

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும்10 ஆகிய வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது.

இதில் பயன்பெற, 9 மற்றும் 10-ம் வகுப்பில் பயிலும் மாணவிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது அஞ்சல் வங்கிகளில் தன் பெயரில் கணக்கு தொடங்கி, அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். ஆதார் எண், வங்கிக் கணக்கு, வருமானச் சான்று, சாதிச்சான்று நகல்களை தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தலைமையாசிரியர்கள் மாணவியரின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாணவிகள் பள்ளி தலைமையாசிரியர்களை அணுக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News