Monday, January 1, 2024

கண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும் கிழங்கு எது?

பொதுவாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு கண் குறைபாடு பிரச்சனை இருந்து விலகி ஆரோக்யமாக வாழலாம்

கண்களின் ஆரோக்கியத்திற்கு நாம் என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெளிவாக பார்க்கலாம்.

1.நம் உடல் உறுப்புகளில் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று கண்.

2.அந்தக் கண்ணை நாம் எவ்வளவு அக்கரையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியம். 

3.ஆனால் இந்த காலகட்டத்தில் 20 வயதில் இருப்பவர்களுக்கு கண் பிரச்சனை வருவது வழக்கமாகிவிட்டது. அப்படி கண் பிரச்சனையிலிருந்து விலகி ஆரோக்கியமாக இருக்க சில உணவு முறைகளை பயன்படுத்தலாம்.

4.முதலில் நாம் சாப்பிடுவது சர்க்கரை வள்ளி கிழங்கு. ஏனெனில் கண்கள் ஆரோக்கியத்திற்கு சர்க்கரை வள்ளி கிழங்கு பெரும் பங்கு வகிக்கிறது.

5.இதில் பீட்டா கரோட்டின் என்ற சத்து அதிகமாக இருப்பதால் பார்வை குறைபாடுகளை சரி செய்ய பெருமளவில் உதவுகிறது.

6.மேலும் கீரைகளை அதிகமாக நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் கீரையில் தேவையான வைட்டமின் ஏ மற்றும் அமினோ அமிலங்கள் அதிகமாக இருப்பதால் கண் பிரச்சனைக்கு மருந்தாக அமையும்.

7.இது மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கு கண் பார்வை குறைபாடுகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது வைட்டமின் ஏ குறைபாடு தான்.

8.இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட கேரட் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

9.மாதுளம் பழம் கண்பார்வை குறைபாடு இருக்கு மிகச்சிறந்த உணவாக இருக்கும்.

10.வைட்டமின் ஏ நிறைந்த மாம்பழம் மற்றும் பப்பாளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை பிரச்சனையிலிருந்து தீர்வு கிடைக்கும்.

11. இதனைத் தொடர்ந்து தர்பூசணி சிட்ரஸ் பழங்கள் பாதாம் பருப்பு, நெல்லிக்காய் எலுமிச்சை மீன்கள் பயிறு வகைகள் போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால் கண் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும்.

12. அதிகமாக நீர் அருந்துவதும் மிகவும் முக்கியம். .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News