Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
கைத்தறி துணியாலான மேலங்கிகளை பட்டமளிப்பு விழாக்களில் பயன்படுத்த வேண்டும் என, பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி., வெளியிட்ட அறிவிப்பு:கைத்தறி துணிகளாலான ஆடைகள் அணிவது, இந்தியாவின் தட்பவெப்பநிலைக்கு, மிகவும் உகந்ததாக இருக்கும். எனவே, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி துணியாலான மேலங்கிகளை அணிவதை பரிசீலிக்க வேண்டும் என, யு.ஜி.சி., வலியுறுத்துகிறது.இதுகுறித்து, 2015 ஜூலையிலும், 2019 ஜூனிலும், பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனை பின்பற்றி பல பல்கலைகள், பட்டமளிப்பு விழாக்களில், கைத்தறி துணியாலான மேலங்கிகளை பயன்படுத்த துவங்கிஉள்ளன.ஆனால், சில பல்கலைகள் பழைய மேலங்கி முறையில் இருந்து, இன்னும் மாறவில்லை. அந்த பல்கலைகளும் கைத்தறி துணி மேலங்கியை பயன்படுத்த முன்வருமாறு, கேட்டு கொள்ளப்படுகிறது.
ஒரு இந்தியராக கைத்தறி துணிகளை அணிவது பெருமை என்பது மட்டுமின்றி, கைத்தறி தொழிலை ஊக்கப்படுத்தவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். கிராமப்புற நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எனவே, இதுகுறித்து பல்கலைகளும், கல்லுாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கைத்தறி துணி மேலங்கி பயன்படுத்தியது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை யு.ஜி.சி.,க்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
-
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் பத்து நா...
-
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூ...
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ .600 கோடியில் காலை உணவுத் திட்டம் ரூ .436 கோட...
-
வங்கி ஊழியர்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இந்த யோசனையானது வாங்கி சேவைக்காக நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் வங...
-
ஓட்டுநர் உரிம விதிகள்: ஜூன் 1 முதல் வாகனம் ஓட்டுவதற்கான விதிகள் மாற உள்ளது. ஏதேனும் தவறு செய்தால் ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று கூற...
-
பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. பாதாம் பிசின் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்பட்டு வந்தாலும் இத...
-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் வரவேற்கப்படுகின்ற...
-
ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி திறக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வ...
-
பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2-ம், 3-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு பாடத்திட்டம் வலைதளத்...
-
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டென்மார்க் சென்று, அந்நாட்டு கல்வித் துறை இயக்குநர்களுடன் கலந்துரையாடி, காலை உண...
IMPORTANT LINKS
Friday, January 19, 2024
பட்டமளிப்பு விழாவில் கைத்தறி மேலங்கி பல்கலைகளுக்கு யு.ஜி.சி. வேண்டுகோள்
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment