Monday, January 8, 2024

இனி குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்: மின்வாரியம் அறிமுகம்

குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

வீடுகளில் பயன்படுத்தும் மின்பயன்பாடு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. மின்கட்டணத்தை மின்நுகர்வோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாகவும், செயலி வழியாகவும் செலுத்துகின்றனர். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, செல்போனில் மின்வாரியம் மூலம் வரும் குறுஞ்செய்தியிலேயே (எஸ்எம்எஸ்) மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி வந்ததும் அதில் இருக்கும் இணைப்பை (லிங்க்) கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு அருகில் உள்ள பெட்டியில் எண்ணை (கேப்சா) பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, கட்டணம் செலுத்தும் செயல்முறை தொடங்கும். அதில் எந்த வகையில் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதைத் தேர்வு செய்து அதன் பிறகு மின்கட்டணத்தைச் செலுத்தி விடலாம்.

இதன்மூலம், நுகர்வோர் மின்கட்டணத்தை எளிதாகச் செலுத்தலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News