Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 1, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.02.2024

கல்பனா சாவ்லா

  

திருக்குறள்


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : துறவு

குறள்:347

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

விளக்கம்:

 ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.



பழமொழி :

Measure thrice before you cut once

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்

இரண்டொழுக்க பண்புகள் :1

1.முயற்சியும், தொடர் பயிற்சியும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை என்பதை நான் அறிவேன்.

2.எனவே நான் ஒவ்வொரு நாளும் தேர்விற்காக கடுமையாக முயற்சி செய்தும் , தொடர்ந்து பல பயிற்சிகளை மேற்கொண்டும் அதிக மதிப்பெண்களை பெறுவதற்கு தன்னை உயர்த்திக் கொள்வேன்.

பொன்மொழி :

வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

பொது அறிவு :

1. எந்த மாநிலத்தின் பெண்கள் அதிகம் படித்தவர்கள்?

விடை: கேரளா 

2. இந்தியாவின் தேசிய நிறம் எது?

விடை: குங்குமப்பூ நிறம் 

English words & meanings :

 retaliate - பழிவாங்கும்make an attack in return for a similar attack. reputable - honorable மதிப்பிற்குரிய.

ஆரோக்ய வாழ்வு : 

அகத்தி கீரை: தொண்டை புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும். அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொள்ளும்,

பிப்ரவரி 01

கல்பனா சாவ்லா அவர்களின் நினைவுநாள் 


கல்பனா சாவ்லா அவர்கள் கரியானா மாநிலத்தில் “கர்மல்” என்ற ஊரில் 1961 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 03 ம் திகதி பானராஸ்லால் சாவ்லாவுக்கும் சன்நியோகிதா தேவிக்கும் மகளாக பிறந்தார். 

1988 ஆம் ஆண்டு நாசா ஆராய்ச்சி கூடத்தில் இணைந்து விண்வெளி ஓடங்கள் விமானங்களை ஓட்ட கற்றுகொண்டார்.

2003 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கெனடி விண்வெளி நிலையத்தில் இருந்து STS 107 எனும் கொலம்பிய விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேர் பயணம் செய்தனர். 16 நாள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய அவ் விண்கலம் அமெரிக்காவின் ரெக்சாஸ் வான் பரப்பில் வெடித்து சிதறியது.

ஒரு பெரும் கனவை அடைய விடாமுயற்சியோடும் முழுமனதோடும் செயற்பட்டால் வெற்றிகிட்டும் என வாழ்ந்து காட்டிய இவரது வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமாகும்.

நீதிக்கதை

 செய் நன்றி மறவாதே


கானகத்தில் புள்ளிமான் ஒன்று மகிழ்ச்சியாக துள்ளித் திரிந்து கொண்டிருந்தது.

வேடர்கள் சிலர் புள்ளிமானைப் பார்த்து விட்டனர். இன்று எப்படியும், இந்தப் புள்ளிமானை பிடித்து விட வேண்டும் என நினைத்தனர். அவர்களும் மான்குட்டியைப் பிடிக்கும்

நோக்கில் தம்மை நோக்கித் தான் வருகிறார்கள் என்றும் தெளிவாகப் புரிந்து கொண்டது.

நாம் அவர்களின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் எப்படியும் தப்பித்துக் கொள்ள வேண்டும் என நினைத்தது. சிறிதும் தாமதியாமல் நான்கு கால் பாய்ச்சலில் துள்ளிக் குதித்து ஓடியது. வேடர்களும் விடுவதாய் இல்லை. தொடர்ந்து பின்பற்றி ஓடி வந்தார்கள்.

நீண்ட தூரம் ஓடி வந்துவிட்டது மான்குட்டி. களைப்பு மேலிட மேலும் அதனால் ஓடவும் முடியவில்லை. சற்று இளைப்பாற்றிச் சென்றால் தான் நல்லது எனவும் நினைத்தது.

அதே போல் நின்ற இடத்திலேயே சற்று இளைப்பாறியது. ஆட்கள் வரும் சப்தம் கேட்டு, எழுந்து பார்த்தது. அதே வேடர்கள் தம்மை விடுவதாக இல்லை போலிருக்கிறது.

தொடர்ந்து அயராமல் விரட்டிக் கொண்டும் வந்து விட்டார்கள். பாவம் மான் குட்டிக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவர்கள் சமீபத்தில் வந்து விட்டார்களே "எப்படித் தப்புவது அவர்களிடம்" என்றும் யோசித்தது.

அதன் அருகில் தாவரங்கள் பசுமையால் வளர்ந்து புதர் போல் மண்டிக் கிடந்தன. அப்புதருக்குள் நுழைந்து அமைதியாக ஒளிந்து கொண்டது. புதருக்குள் ஒளிந்து

கொண்ட மான் குட்டி அசைவற்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.

அதன் அருகில் ஓடி வந்த வேடர்கள், தொடர்ந்து மானைத் தேடி ஓடிக் கொண்டு இருந்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் தான், மானுக்கு நிம்மதி வந்தது. தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டோம் என மகிழ்ச்சி அடைந்தது. துள்ளிக் குதித்து புதருக்கு வெளியே வந்தது.

புள்ளிமான் குட்டி ஏற்கனவே பசியோடு இருந்தது. அச்சமயத்தில் தான் வேடர்களைப் பார்த்துவிட்டு தலை தெறிக்கவும் ஓடி வந்தது. எனவே அதன் பசிக் களைப்பு நீங்க, அந்தப் புதரிலுள்ள பசுமையான இலைகளையே ருசித்து மேய்ந்து விட்டது.

சற்று நேரத்தில் மானைக் காண முடியாமல், வேடர்கள் வந்த பாதையிலேயே திரும்பினார்கள். வேடர்கள் பார்வையில் படக்கூடாதென, மீண்டும் புதருக்குள் ஓடி ஒளிந்தது மான்குட்டி.

ஆனால், இப்பொழுது அப்புதர் மான்குட்டிக்கு உதவவில்லை. காரணம் புதரில் இருந்த அடர்ந்த பசுமையான இலைகளையெல்லாம் தான், அது தின்று விட்டதே. எனவே, மான்குட்டியை இலைகளால் மறைக்க முடியவில்லை.

அதன் அருகில் வந்த வேடர்கள் கண்களில்

மான்குட்டி தெரிந்தது. அதனால் உடனே தப்பித்து ஓட முடியவில்லை. இதனால், வேடர்களிடம் மாட்டிக் கொண்டு மான்குட்டி விழித்தது. "நம் அவசர புத்தியால் தானே, நம் உயிரைக் காப்பாற்றிய இலைகளைத் தின்று விட்டோம்."

"நன்றி மறந்து செய்த செயலுக்கு ஆண்டவன் தண்டனை தந்து விட்டாரே". என எண்ணி கண்ணீர் வடித்தது.


நீதி : செய் நன்றி மறந்தவர்கள் மிருகங்களை விட மோசமானவர்கள்.

இன்றைய செய்திகள் 01.02.2024


*குழந்தைகள் மதிய உணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி- முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு.

*ஜெர்மனியில் இன்று முதல் நான்கு நாள் வேலை திட்டம் அமலுக்கு வருகிறது. உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு பணியாளர்களின் செயல் திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி நாடு எதிர்பார்க்கிறது.

*உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சி பெற்று உள்ளது - ஜனாதிபதி பெருமிதம்.

*தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் வருகிற 2ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு.

*கேலோ இந்தியா நிறைவு: 97 பதக்கங்களை குவித்து தமிழக அணி இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை.

Today's Headlines

*Additional Funding for Children's Mid Day Scheme- Chief Minister M K Stalin's order.

 *The four-day work plan comes into effect in Germany from today.  Germany expects that this will improve the employers 's  physical and mental health and thus by their efficiency .

 * India is growing majestically on the world stage - President.

 * Chance of mild rain in South Tamil Nadu and Delta districts till 2nd feb

 * Khelo India Completed: Tamil Nadu team achieved second place by bagging 97 medals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News