நவீன உலகில் கொடிய நோய்கள் கூட எளிதில் ஏற்படுகிறது.
இதற்கு முக்கிய காரணங்கள் நாம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான்.
உடல் ஆரோக்கியம் இழப்பதால் எலும்பு வலி, மூட்டு வலி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படும். இதை குணமாக்க சோம்பு, புதினா, இஞ்சி, மிளகு, மஞ்சள் சேர்த்த பானம் அருந்தி வருவது நல்லது.
1)சோம்பு - 1/4 ஸ்பூன்
2)புதினா - 5 முதல் 8 இலைகள்
3)இஞ்சி அல்லது சுக்கு - 1 துண்டு
4)மிளகு - 4(இடித்தது)
5)மஞ்சள் - சிட்டிகை அளவு
ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
அடுத்து அதில் 1/4 ஸ்பூன் அளவு சோம்பு மற்றும் 4 இடித்த மிளகு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பிறகு 1 துண்டு இஞ்சி அல்லது சுக்கை தோல் நீக்கி இடித்து அதில் சேர்க்கவும். பிறகு 8 புதினா இலைகளை அதில் சேர்க்கவும்.
பிறகு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும். பானம் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து ஐந்து நிமிடங்களுக்கு ஆற விடவும்.
இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி குடித்து வந்தால் உடலில் மூட்டு வலி, உடம்பு வலி, பித்தம், கபம் உள்ளிட்ட பல நோய்கள் குணமாகும்.
No comments:
Post a Comment