அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர் பணியில், 1,768 பேரை நியமிக்க, ஜூன் 23ல் தேர்வு நடத்தப்படும் என டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., செயலர் ராமேஸ்வர முருகன் அறிவிப்பு:
வரும் ஜூன் 23ல், ஓ.எம்.ஆர்., வகை விடைத்தாளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, trb.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் 14ம் தேதி துவங்க உள்ளது. மார்ச் 15க்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சம், பிளஸ் 2 படிப்புடன், தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் படிப்பான டி.எல்.எட்., அல்லது பி.எல்.எட்., படித்திருக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விரிவான விபரங்களை, ஆசிரியர் தேர்வு வாரியத்தின், trb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment