Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 17, 2024

தினமும் 3 ஏலக்காய் சாப்பிட்டால் போதும்!

தாவர குடும்பத்தை சார்ந்த ஏலக்காய் மசாலாப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. பிரியாணி முதல் நாம் தினமும் காலை அருந்தும் டீ வரை பெரும்பாலான உணவுகளில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஏலக்காய் மைசூர், மலபார், சிலோன், மஞ்சராபாத், பீஜ்பூர் பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. குங்குமப்பூவுக்கு அடுத்தபடியாக உலகின் மிக விலையுயர்ந்த நறுமணப் பொருளாக அமைந்துள்ளது ஏலக்காய்.

இதன் சத்துக்கள்:

இதில் 311 கலோரிகள், 10.7 கிராம் புரதம், 6.7 கிராம் கொழுப்பு. 0.38 மில்லி கிராம் கால்சியம், 178 மில்லி கிராம் பாஸ்பரஸ், 18 மில்லி கிராம் சோடியம், 13.9 மில்லி கிராம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

மேலும் படிக்க: சளி-இருமலை குணபடுத்த வீட்டில் கிடைக்கும் மசாலாப் பொருட்கள்!

ஏலக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்:

பழங்கால மருத்துவம் பற்றி கூறும் நூல்களில் ஏலக்காயின் நறுமணம் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்த தகவல்கள் ஏராளமாக உள்ளது. அதே போல இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில், சிறுநீரகத் தொற்றைக் குணப்படுத்துவதற்கும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கும் ஏலக்காய் பெரிதும் உதவுகிறது.

ஏலக்காயை வாயில் போட்டு மெல்லுவதால், பற்கள் மற்றும் ஈறுகளுக்கு உறுதியளிக்கிறது. மேலும் பாக்டீரியாக்களால் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவுகிறது. வாயில் துர்நாற்றம் அதிகமாக இருக்கும் நிலையில் உப்பு, இரண்டு துளசி மற்றும் புதினா இலைகளுடன் ஒரு ஏலக்காய் சேர்த்து மென்று பல் துலக்கினால், வாய் துர்நாற்றம் நீங்கி வாய் மணப்பதுடன், பற்களும் ஈறுகளும் வலுவடையும். அதே போல புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்கு ஏலக்காய் பயன்படுத்தலாம்.


தினமும் இரவு துங்குவதுற்கு முன்பு ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் மூன்று ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவை நாளடைவில் குணமாகும். சூழ்நிலை மாற்றத்தினால் ஏற்படும் சளி இருமல் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் ஏலக்காய் என்று கூறலாம். ஏலக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் ஏலக்காயின் நறுமணம் நம் மனதை சமநிலைப்படுத்த உதவுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

எத்தனை ஏலக்காய் சாப்பிடலாம்?

தினமும் 2 முதல் 3 ஏலக்காய் சாப்பிடலாம். பச்சை ஏலக்காயை அப்படியே மென்றும் சாப்பிடலாம். ஏலக்காய் பொடி என்றால் சிறிது அளவு எடுத்து, தேன் அல்லது பாலில் கலந்துக் குடிக்கலாம்.

ஏலக்காய் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

கல்லீரல், பித்தப்பை தொடர்பான நோய்களும், அவற்றிற்கான மருந்து எடுத்துக்கொள்பவர்கள், ஏலக்காய் சாப்பிட விரும்பினால் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் அதிகம் ஏலக்காய் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏலக்காய் எண்ணெயோ அல்லது அதிலிருந்து பெறப்படும் மருந்துகளோ தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும்போது சிலருக்கு வாந்தி, குமட்டல், அஜீரணம், வயிற்று வலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்றவை ஏற்படக்கூடும். அந்த வேளையில் உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

No comments:

Post a Comment