Monday, February 5, 2024

புற்றுநோயை அண்ட விடாமல் தடுக்கும் பழங்கள் எவை தெரியுமா?

புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வு தற்காலத்தில் எல்லோருக்கும் வந்து விட்டது என்றாலும், இன்னும் பலருக்கு அதனைப் பற்றிய விவரங்கள் தெரியாமலே இருக்கின்றன.

இந்த நோயை முழுவதும் நம்மை நெருங்கவிடாமல் தடுப்பதற்கு சில வகை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தாலே போதும் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். அதனைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

கொய்யாப்பழம்: இதை சரிபாதியாக வெட்டிப் பார்த்தால் புற்றுநோய் செல்கள் போன்றே காட்சியளிக்கும். புற்றுநோய்க்கு எதிராக கொய்யாப்பழம் சிறப்பாக செயல்படுகின்றது. இதில் 'லைக்கோபினே', 'க்வெர்செடின்' போன்ற வேதிப்பொருட்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.

சப்போட்டா: இதிலுள்ள வைட்டமின்கள் ஏ மற்றும் பி சத்தானது, உடல் மற்றும் சருமத் திசுக்களின் சுகாதாரத்தை பராமரிப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி ஆக்சி காரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் புற்று நோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகின்றன.

பேரிக்காய்: தாயின் கருவறையில் குழந்தை பத்து மாதம் கழித்து பிறப்பது போல, இந்தப் பழம் பூ பூத்து ஒன்பது மாதங்கள் கழித்துதான் காய் உருவாகிறது. மேலும், பேரிக்காயை நறுக்கினால் அதன் அமைப்பு, பெண்களின் கருப்பை வடிவத்தில் அமைந்திருக்கும். இதில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. இவை பெண்களின் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கின்றது.

தக்காளி: புற்றுநோய் வர விடாமல் தடை செய்வதற்கு தக்காளி பெரும் துணை புரிகிறது. தக்காளி சேர்த்த உணவை சாப்பிடும் பெண்களுக்கு செர்விகல் கேன்சர் எனப்படும் கருப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இது மட்டுமல்ல, மார்பக புற்றுநோய், கருப்பையில் ஏற்படும் எண்டோமெட்ரியல் கேன்சர், சுவாசப்பை புற்றுநோய் ஆகியவற்றிலிருந்தும் தடுக்க தக்காளி உதவுகிறது. இப்படி பல்வேறு புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் திறன் கொண்டதாக தக்காளி விளங்குகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News