Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 29, 2024

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் முருங்கை கீரை தோசை.!


வியக்கத்தக்க மருத்துவ குணங்கள் அடங்கிய முருங்கைக் கீரை பல நோய்களைக் குணப்படுத்தவும், வருமுன் காக்கவும் உதவுகிறது.
முருங்கைக் கீரையில் உடலுக்குத் தேவையான முக்கியமான 9 அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும், முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

இரும்புச்சத்து ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. செயற்கையாக நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளில் கிடைக்கும் இரும்புச்சத்தை விட, முருங்கைக் கீரையில் இயற்கையாக அமைந்துள்ள இரும்புச்சத்தை நம் உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும்.

அளவில்லா மருத்துவ பண்புகளை உள்ளடக்கிய முருங்கை கீரை கொண்டு எவ்வாறு சத்து நிறைந்த சுவையான தோசை சுடலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :


பச்சை அரிசி - 2 கப்

உளுத்தம் பருப்பு - 1/4 கப்

முருங்கை இலை - 1/4 கப்

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - 1 துண்டு

உப்பு - தேவையான அளவு


செய்முறை:

முதலில் இரண்டு பாத்திரங்களில் பச்சரிசி மற்றும் உளுத்தம்பருப்பை தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்கள்.

பச்சரிசி மற்றும் உளுத்தம்பருப்பு இரண்டும் நன்றாக உரியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் அலசிய முருங்கை இலை, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

தற்போது புளிக்க வைத்த மாவுடன் இந்த அரைத்த முருங்கை இலையை போட்டு கலந்து கொள்ளுங்கள்.

பின்பு அதனுடன் ஓரளவிற்கு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தையும் போட்டு தோசை மாவை நன்றாக கலக்கவும்.

பின்னர் அடுப்பில் தோசை கல் ஒன்றை வைத்து சூடானதும் எண்ணெய் தடவி கொள்ளுங்கள்.

பின்பு அதில் கலந்து வைத்துள்ள மாவை கொண்டு தோசையாக ஊற்றி எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.

தோசை ஒருபுறம் நன்றாக வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவைக்கவும்.

தோசை முழுவதும் வெந்ததும் எடுத்து சூடாக அனைவருக்கும் பரிமாறுங்கள்.

இந்த சத்து நிறைந்த சுவையான முருங்கை இலை தோசையை நீங்கள் தேங்காய் சட்னி, சாம்பார், கார சட்னி, தக்காளி வெங்காய சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.

No comments:

Post a Comment