மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ), 2024-25-ம் கல்வியாண்டு வருகிற ஏப்ரல்1-ம் தேதியன்று தொடங்குகிறது. இதையடுத்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான புதிய பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதன்படி தற்போது 9 மற்றும் 10-ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தில், 2 மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை கட்டாய பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளது. மேலும், 3-வது மொழி (தமிழ் உள்பட உள்ளூர் மொழிகள்) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடம், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டுள்ளன.
கலை படிப்பு, உடற்கல்வி, உடல் நலம், தொழிற்பயிற்சிகள் ஆகியவற்றை உள்மதிப்பீட்டுக்காக பள்ளிகளே தேர்வு செய்து கொள்ளலாம் என்று புதிய பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில், 9 பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், 5 கட்டாயப் பாடங்களும், 4 விருப்பப் பாடங்களும் இடம் பெற்றுள்ளன. 3- வது மொழியாக தமிழ் உள்பட 34 மொழிகளை தேர்வு செய்யலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment