Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 15, 2024

2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு அறிவிப்பு வெளியீடு

தமிழகத்தில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிப்புவதற்கு புதிய அறிவிப்பை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு வருவாய்த் துறை

பணி: கிராம உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 2299

மாவட்டங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்:

அரியலூர் - 21,சென்னை 20, செங்கல்பட்டு-41, கோயம்புத்தூர்-61, கடலூர் - 66, திண்டுக்கல் - 29, தருமபுரி - 39, ஈரோடு - 141, காஞ்சிபுரம் - 109, கரூர் - 27, கிருஷ்ணகிரி -33, மதுரை - 155, மயிலாடுதுறை - 13, நாகப்பட்டினம் - 68, நாமக்கல் - 68,பெரம்பலூர் - 21, புதுக்கோட்டை - 27, ராமநாதபுரம் - 29, ராணிபேட்டை 43, சேலம் - 105,சிவகங்கை - 46, தஞ்சாவூர் - 305, தேனி-25, திருவண்ணாமலை - 103, திருநெல்வேலி - 45, திருப்பூர் - 102, திருவாரூர் - 139, திருவள்ளூர் - 151, திருச்சி - 104. தூத்துக்குடி - 77, தென்காசி - 18, திருப்பத்தூர் -32, விருதுநகர் - 38, வேலூர் - 30, விழுப்புரம் - 31.

தகுதி: குறைந்தபட்ச கல்வித்தகுதி ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை

பதவி உயர்வு: 10 ஆண்டுகளுக்கு பின்பு கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும்.

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 21 - 32, 37க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பெற்றோரை இழந்தோர், ஆதரவற்ற விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை, வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News