தமிழ்நாடு மருத்துவத்துறையில் 2,553 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதச் சம்பளம் படி, ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம்( TNMRB) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கென காலியாக உள்ள 2,553 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கென மொத்தம் 2553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 01.07.2024 அன்றைய தேதியின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 37 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் கொடுக்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில்(TNMRB) விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.04.2024-ம் தேதி முதல் 15.05.2024-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment