ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலை. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசுபல்கலைக்கழகமான ‘இக்னோ' வின் சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமோ, பட்டம், முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இக்னோவில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படிப்புகளில் சேரும் தகுதியுள்ள எஸ்சி, எஸ்டிவகுப்பினருக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனவரி பருவசேர்க்கை மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.ignou.ac.in)அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்
No comments:
Post a Comment