Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 28, 2024

இனி கலை அறிவியல் கல்லூரிகளில் இனி நேரடி சேர்க்கை கிடையாது!!

நடப்பு கல்வியாண்டு முதல் இனி கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒற்றை சாளர சேர்க்கை முறை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் இந்த ஒற்றைசாளரை முறை அதாவது கவுன்சிலிங் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.

இந்த ஒற்றைசாளர முறையால் மாணவர்கள் அனைவருக்கும் தரவரிசை முறைப்படி சேர்க்கை நடைபெறும்.அது மட்டுமின்றி இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்றவாறு பாடப் பிரிவினையானது ஒதுக்கப்படும்.இவ்வாறு செய்வதால் இதில் கலந்துக்கொள்ளும் மாணவருக்கு முதலில் படாப்பிரிவானது ஒதுக்கப்படமால் அடுத்த மாணவருக்கு ஒதுக்க இயலாது.

அந்த வகையில் அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது தனியாக விண்ணப்பித்து வந்தனர்.ஆனால் இனி நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் அனைவருக்கும் இந்த ஒற்றை சாளர முறையில்(Single Window Admission System) சேர்க்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில் கூறியுள்ளதாவது,

கல்லூரிக் கல்வி இயக்குநர் தலைமையில் 06.03.2024 அன்று கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்ற அரசு உதவிபெறும் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில், அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு பின்பற்றப்படும் ஒற்றை சாளர முறை (Single Window System), போன்று அரசு உதவிபெறும் கல்லூரிகளின், உதவிபெறும் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளர முறையிலான மாணக்கர் சேர்க்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர்களின் ஆலோசனைக்குப் பின், அக்கூட்டத்தில், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ளஅரசு உதவிபெறும் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கையை ஒற்றை சாளர முறையில் (Single Window System) பின்பற்றுவது தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை பெற்று செயல்படலாம் என முடிவு செய்யப்பட்டது. அதற்கிணங்க மேற்காண் பொருள் தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க ஏதுவாக பின்வரும் கல்லூரி முதல்வர்களை கொண்டு குழு அமைக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News