Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 31, 2024

தேர்வு தேதி மாற்றப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றமில்லை - பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை திருத்தப்பட்டாலும் கோடை விடுமுறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித் துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் 11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்டது. தொடர்ந்து 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26-ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற உள்ளது. பெரும்பாலான பள்ளிகள் வாக்குச் சாவடிகள் மற்றும் தேர்தல் முகாம்களாக மாற்றப்பட உள்ளன. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி இறுதித் தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். தொடர்ந்து மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறி வித்தது.

ரம்ஜான் பண்டிகை: இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஈகை பெருநாளை முன்னிட்டு தேர்வு தேதியை மாற்றியமைக்க எம்எல்ஏக்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.

அதையேற்று அனைத்து விதமான பள்ளிகளிலும் 4 முதல் 9-ம்வகுப்புகளுக்கு ஏப்ரல் 10-ம் தேதிநடைபெற இருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. அதேபோல், ஏப்ரல் 12-ல் நடத்தப்படவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23-ம் தேதிக்கு மாற்றப்படுகிறது. அதன்படி, தேர்வுகளை நடத்தி முடிக்க அனைத்து பள்ளி தலைமைஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப் படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

புதிய தேர்வு அட்டவணையில் கோடை விடுமுறை குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை. இதனால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர வேண்டுமா என கேள்விகள் எழுந்தன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையில்எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. மாணவர்கள் ஏப்.8-ம் தேதிக்கு பின்னர் 2 தேர்வுகளை எழுத மட்டும் பள்ளிக்கு வரவேண்டும். அதாவது, ஏப்.22, 23-ம் தேதிகளில் நடைபெறவுள்ள அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வு களுக்கு வந்தால் மட்டும் போதும்.

திறப்பு தேதி பின்னர் அறிவிப்பு: எனினும், மாணவர் சேர்க்கை, தேர்வு மற்றும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள் ஏப்ரல் 26-ம் தேதி வரை தொடர்ந்து பள்ளிக்கு வரவேண்டும். கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்’’ என்றனர்.


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News