மேஷம்
குழந்தைகளின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் உண்டாகும். மறைமுகமான சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் ஆரோக்கியம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும்.
ரிஷபம்
கவலைகள் விலகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
மிதுனம்
கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும்.
கடகம்
நிதானம் வேண்டிய நாள். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பேச்சுக்களில் பொறுமையை கடைபிடிப்பது பகைமையை தவிர்க்கும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். உடன் இருப்பவர்களால் சில நெருக்கடிகள் ஏற்படும். வியாபார வியூகங்களில் சில குழப்பங்கள் உண்டாகும்.
கன்னி
மனதளவில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும்.
துலாம்
தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மத்தியில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மேன்மை உண்டாகும். மனதில் வித்தியாசமான சிந்தனை ஏற்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும்.
தனுசு
நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். குழந்தைகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் இழுபறிகள் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் சுமூகமற்ற சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
மகரம்
குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகனம் மாற்றுவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாடிக்கையாளர்களின் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
கும்பம்
பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் வழியில் அனுகூலமான சூழல் அமையும். எதிர்பாராத சில திடீர் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தடைபட்ட சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். அலுவலகப் பணிகளில் காலதாமதம் ஏற்படும். உணவு தொடர்பான விஷயங்களில் திருப்தி இன்மை ஏற்படும்.
No comments:
Post a Comment