வாக்குச்சாவடியில் பராமரிக்கப்படும் வாக்குப் பதிவேடு ( படிவம் 17 A ) தொடர்பாக சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு :
Election Commission Letter 👇
திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் வாக்குப்பதிவு 19.4.2024 அன்று நடைபெறவுள்ளது.வாக்குப் பதிவின் போது வாக்குச்சாவடியில் பராமரிக்கப்படும் பதிவேடு 17A ( Register of Vote ) ஆனது வாக்குப் பதிவு நாள் முடிந்த மறுநாள் 20.4.2024 காலை 11.00 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் பார்வையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களால் ஆய்வுசெய்யப்படவுள்ளது.
வாக்குச் சாவடி அலுவலர் 17A பதிவேட்டில் குறிப்பு பகுதியான கலம் 3 ல் வாக்காளர்களின் அடையாள ஆவணங்கள் விவரங்களான , வாக்காளர் அடையாள அட்டை எண் , அல்லது தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட 13 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி , வாக்கு அளித்த விவரம் குறிப்பிட வேண்டும் . ஆனால் மேற்படி பதிவேட்டில் வாக்காளர் அடையாள மேற்படி விவரங்கள் ஆவணங்கள் குறிப்புக் கலத்தில் 2 வது வாக்குச் சாவடி அலுவலரால் ஆல் குறிப்பிடப்படுவதில்லை என்று தேர்தல் ஆணையம் பார்வையில் கண்ட கடித்தில் தெரிவித்துள்ளது.
மேலும் 17A பதிவேட்டில் இது போன்ற விடுபாடுகள் இருக்கும் பட்சத்தில் 20.4.2024 அன்று இத்தகைய வாக்குச் சாவடியின் 17A பதிவேடுகள் தேர்தல் பார்வையாளர்கள் , தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலவலர்கள் ஆகியோரால் வேட்பாளர்கள் / முகவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும் . அப்போது மேற்படி குறைபாடுகள் கண்டறிப்பட்டால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மீதும் 2 வது வாக்குச் சாவடி அலுவலவர் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்படி தகவலை பயிற்சி வகுப்பின் போது கண்டிப்பாக தவறாமல் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இக்கடிதம் பெற்றுக் கொண்டமைக்கு உடனடியாக ஒப்பதல் அளிக்க கேட்டுக்கொள்கிறேன்
No comments:
Post a Comment