Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 23, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.04.2024

உலகப் புத்தக நாள் (World Book Day

திருக்குறள்: 

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: கல்வி 

குறள்:396

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

விளக்கம்:

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.

பழமொழி :

Little drops of water make the mighty ocean

சிறு துளி பெரு வெள்ளம்

இரண்டொழுக்க பண்புகள் :

 1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.

பொன்மொழி :

நம் வாழ்க்கை தேடலில் தொலைக்கக் கூடாத மிகப்பெரிய புதையல்.. தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சி.!”

பொது அறிவு : 

1. ரப்பர் ஸ்டாம்பு மை தயாரிக்க பயன்படும் சேர்மம் எது?

விடை: கிளிசரால்

 2. உருவத்தில் பெரிய தேனீயாக அழைக்கப்படுவது எது?

விடை: இராணித்தேனீ 

English words & meanings :

 Upbeat - cheerful; உற்சாகமான.
Charismatic - likable person;  கவர்ந்திழுக்கும் நபர்.

ஆரோக்ய வாழ்வு : 

நுங்கு பயன்கள் : நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி, பசியையும் தூண்டும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு - இரண்டுக்குமே நுங்கு மருந்தாக இருப்பது அதிசயம். நுங்கைச் சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.  

ஏப்ரல் 23

உலகப் புத்தக நாள் (World Book Day


உலகப் புத்தக நாள் (World Book Day) அல்லது உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் (World Book and Copyright Day) அல்லது உலக புத்தக நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23 ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது. 

பாரிஸ் நகரில் 1995 ஆகத்து 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,

"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"

நீதிக்கதை

 மூன்று பொம்மைகள்


மன்னர் ஒருவரின் சபையிலே மதிநுட்பம் வாய்ந்த புலவர் ஒருவர் இருந்தார். மன்னர் எதைச் செய்தாலும், புலவருடன் கலந்தாலோசனை செய்த பின்பே முடிவெடுப்பார். இதனைக் கண்டு சபையில் இருந்த அமைச்சர்கள் மிகுந்த கோபம் கொள்வதுண்டு.

அமைச்சர்களின் கோபத்தையும் மன வருத்தத்தையும் மன்னர் அறிந்து கொண்டார். அவர்களுக்கு உண்மையைப் புரியவைக்க வேண்டும் என விரும்பினார். அதற்குரிய வாய்ப்பு மன்னருக்குக் கிடைத்தது.

மன்னரும் அமைச்சர்களும் கூடியிருந்த சபைக்குச் சிற்பக்கலைஞர் ஒருவர் வந்தார். அவர் தம்மிடம் மூன்று பொம்மைகள் உள்ளது என்றும்

அவற்றை மன்னர் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

"பொம்மைகளைக் காட்டுங்கள் என்றார் மன்னர்.

கலை நயம் மிகுந்த பொம்மைகள் மூன்றை, சிற்பி தனது பையிலிருந்து எடுத்து மன்னனின் பார்வைக்காக வைத்தார்.

அழகான பொம்மைகள்; மூன்றும் ஒரே அளவு; ஒரே அச்சில் வார்த்தது போலத் தோற்றமளித்தன.

மன்னர் ஒரே மாதிரியான தோற்றமுள்ள பொம்மைகளில் ஒன்றை மட்டுமே வாங்க நினைத்தார்.

"அமைச்சர்களே! இவற்றுள் எது நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுங்கள்" என்றார்.

அமைச்சர்கள் வியப்படைந்தனர். "மன்னரே! மூன்று பொம்மைகளும் ஒன்று போலவே இருப்பதால் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதில் தேர்வு செய்ய என்ன இருக்கிறது?" என்று கூறினார்கள்.

"அப்படியா. சரி, சிற்பியாரே! முதல் பொம்மையைக் கொடுங்கள். அதையே எடுத்துக் கொள்ளலாம்" என்றார்.

அச்சமயம் சபைக்கு வந்தார் புலவர்."மன்னரே, சற்றுப் பொறுங்கள். மூன்று பொம்மைகளில் எது சிறந்தது என்பதை நான கண்டறிந்து தேர்வு செய்கிறேன்” என்றார் புலவர்.

மன்னரும் அமைச்சர்களும் புலவர் எவ்வாறு தேர்வு செய்யப்போகிறார் என்பதை அறியும் ஆவலுடன் இருந்தார்கள்.

புலவர் பொம்மைகள் இருந்த இடத்திற்கு வந்தார். சிறிய கல் ஒன்றை எடுத்து ஒரு பொம்மையின் காதில் போட்டார். அந்தக் கல், மற்றொரு காது வழியாக வெளியே வந்து விட்டது

அந்தக் கல்லை, அடுத்த பொம்மையின் காதில் போட்டார். காதுக்குள் போட்ட கல், பொம்மையின் வாய் வழியாக வெளியில் வந்து விட்டது."

மூன்றாவது பொம்மையின் காதில் கல்லைப் போட்டார். அந்தக் கல், வெளியே வராமல் பொம்மைக்குள்ளேயே தங்கி விட்டது.

"மன்னரே! முதல் பொம்மை தனது காதால் கேட்டதை, மற்றொரு காதால் வெளியில் விட்டு விடும். அடுத்த பொம்மை காதால் கேட்டதை வாயால் சொல்லி விடும். மூன்றாவது பொம்மையோ காதால் கேட்டதை எவரிடமும் கூறாது. எனவே மூன்றாவது பொம்மையே நல்ல பொம்மை"

புலவரின் தேர்வைக் கண்டு மன்னர் கைதட்டி ஆரவாரித்துப் பாராட்டினார். புலவரின் நுண்மதியை அமைச்சர்களும் வியந்து போற்றினார்கள்.

இன்றைய செய்திகள்

23.04.2024

*அமெரிக்க குடியுரிமை பெற்ற 2- வது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது.

*கடந்த 4 மாதங்களில் பிரேசிலில் டெங்கு காய்ச்சலுக்கு 1,600 பேர் பலி.

*தமிழகத்தில் வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை மையம் எச்சரிக்கை.

*ஏ.டி.பி., சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் இரட்டையரில் இந்தியாவின் ரித்விக், -பூனாச்சா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

*கேன்டிடேட் செஸ் போட்டியில் சாம்பியன்: தமிழக வீரர் குகேசுக்கு தலைவர்கள் வாழ்த்து.

Today's Headlines

*India is the 2nd largest country of American citizenship.

 *1,600 people have died of dengue fever in Brazil in the last 4 months.

 *Heat wave likely to hit Tamil Nadu: Meteorological Department warns.

 * India's Rithvik-Poonacha duo won the ATP Challenger Cup tennis doubles title.

 * Leaders congratulate Tamil Nadu player kugesh who won the Champion in candidate chess tournament:
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News