Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, April 15, 2024

3,712 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிப்பது எப்படி?

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) நடத்தும் 'Combined Higher Secondary (10+2) Level' தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதன் மூலம் குரூப் சி பிரிவு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சுமார் 3,712 கிளர்க் மற்றும் டேட்டா என்ட்ரி காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பின் விவரத்தை இக்கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பணி விவரம்:

க்ளார்க் (Lower Division Clerk LDC) / Junior Secretariat Assitant (JSA)

Data Entry Operator (DEO)

Data Entry Operator Grade A

இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 3,712 பணியிடங்கள் நிரப்பட்ட உள்ளதாகவும், இருப்பினும், மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து மத்திய அரசு தேர்வாணையத்தின் முடிவே இறுதியானது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant (JSA) - Pay Level-2 ரூ.19,900 முதல் ரூ. 63,200)
Data Entry Operator (DEO)- Pay Level-4- ரூ. 25,500 முதல் ரூ.81,100 மற்றும் Level-5-ரூ.29,200 முதல் ரூ. 92,300 வரை
Data Entry Operator, Grade 'A'-Pay Level-4- ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 27 வரை இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக முழு விவரம் அறிய https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice%20of%20CHSLE%202024_05_04_24.pdf- என்ற லிங்கை .

விண்ணப்ப கட்டணம்:

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும். பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், பெண்கள், முன்னாள் இராணுவ பணியாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இதற்கு கம்ப்யூட்டர் வழியிலான ஆன்லைன் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் நடத்தப்படும்.

முதல்நிலை எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:





இரண்டாம்நிலை எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:



கூடுதல் தகவல்களுக்கு:

ஆங்கில மொழியில் உள்ள அறிவிப்பின் லிங்கை https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice%20of%20CHSLE%202024_05_04_24.pdf - க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
home page- ல் Apply என்பதை .
SSC GD Constable Recruitment, Apply என்பதை
முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவைகளுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

முக்கியமான நாட்கள்:


விண்ணப்பிக்க கடைசி தேதி- 07.05.2023 - இரவு 11 மணி வரை

விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய கடைசி நாள் - 10.05.2023 - 11.05.2023

முதல் நிலை கம்யூட்டர் தேர்வு நடைபெறும் மாதம்- ஜூன், ஜூலை - 2024

இரண்டாம் நிலை கம்ப்யூட்டர் தேர்வு நடைபெறும் மாதம்- தேர்வு நடைபெறுவது குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment