Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 25, 2024

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: மொத்த பணியிடங்கள் 6244; எந்த பதவிக்கு எத்தனை இடங்கள்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கிராம நிர்வாக அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 108

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 - 71,900

இளநிலை உதவியாளர் (அமைச்சு பணி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2486

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 - 71,900

இளநிலை உதவியாளர் (பிற பணிகள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 118

(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - 10, வக்பு வாரியம் - 27, குடிநீர் வடிகால் வாரியம் - 49, சிறு தொழில் கழகம் - 15, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - 7, மூலிகை மருந்து கழகம் - 10)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.

சம்பளம்: ரூ. 19,500 - 62,000

தட்டச்சர் (அமைச்சு பணி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1653

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 - 71,900

தட்டச்சர் (பிற பணிகள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 52

(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - 3, சிறு தொழில் கழகம் - 3, வாணிப கழகம் - 39, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - 7)

சம்பளம்: ரூ. 19,500 - 62,000 (வாணிப கழகம் ரூ. 19,500 - 71,900)

சுருக்கெழுத்து தட்டச்சர் (அமைச்சு பணி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 441

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,600 - 75,900

சுருக்கெழுத்து தட்டச்சர் (பிற பணிகள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - 2, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் - 2)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,600 - 65,500

நேர்முக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,600 - 65,500

நேர்முக எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2
(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)

சம்பளம்: ரூ. 19,500 - 62,000

தனிச் செயலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4
(தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

சம்பளம்: ரூ. 20,600 - 65,500

இளநிலை செயல் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 34
(தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 - 62,000

இளநிலை செயல் பணியாளர் (தட்டச்சு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7
(தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 - 62,000

வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொலைபேசி இயக்குவதில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 - 62,000

பால் அளவையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 15
(தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

சம்பளம்: ரூ. 18,200 - 57,900

ஆய்வக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 25
(தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணி)

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 - 71,900

வரித்தண்டலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 66

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 - 71,900

முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 49

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்புடன் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 - 50,400

வனக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 171

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,200 - 57,900

ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 192

சம்பளம்: ரூ. 18,200 - 57,900

வனக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 526

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,600 - 52,400

வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 288

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,600 - 52,400

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,600 - 75,900

தேர்வு முறை: தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். தேர்வு நடைபெறும் நாள்: 09.06.2024

No comments:

Post a Comment