Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 20, 2024

சென்னை விமான நிலைய வேலை 422 பணியிடங்கள்



சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய விமானச் சேவைத் துறையின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

Utility Agent Cum Ramp Driver

காலியிடங்களின் எண்ணிக்கை : 130

கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் OBC பிரிவினர் 31 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 24,960

Handyman/ Handywoman

காலியிடங்களின் எண்ணிக்கை : 292

கல்வித்தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் OBC பிரிவினர் வயது வரையிலும், SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 22,530

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.aiasl.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Office of the HRD Department, AI Unity Complex, Pallavaram Cantonment, Chennai -600043

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :

Utility Agent Cum Ramp Driver: 02.05.2024

Handyman : 04.05.2024

விண்ணப்பக் கட்டணம்: நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய்க்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் AI AIRPORT SERVICES LIMITED என்ற பெயரில் டி.டி எடுக்க வேண்டும். அதேநேரம் SC/ST மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு கட்டண விலக்கு உண்டு.

இந்த அறிவிப்பு தொடர்பாக, மேலும் விவரங்கள் அறிய https://www.aiasl.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment