வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்த அனைவருமே ஒரு விஷயத்தை கவனித்து இருக்க முடியும். சாட் வரிசைகள் இருக்கும் இடத்தில் புதிய சாட் உருவாக்கும் பட்டனுக்கு மேலே புதிதாக நீல நிறத்தில் ஒரு வட்டம் போன்ற ஆப்ஷனை கவனித்திருப்பீர்கள்.அது என்ன எதற்காக சேர்க்கப்பட்டுள்ளது?அதன் பயன்கள் என்ன?
அதை எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்கு தெரியுமா? அதை எல்லாமே இப்போது தெரிந்து கொள்ளலாம்.
OpenAI நிறுவனம் ChatGPT என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாட் பாட்டை நவம்பர் 2022 இல் கொண்டு வந்தது. இந்த சேட் பாட்டை பல வகைகளிலும் மக்கள் பயன்படுத்த தொடங்கினர். இதற்கான வரவேற்பும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து மற்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில் நுட்பத்தை உருவாக்க தொடங்கினர்.
மெட்டா நிறுவனம் மெட்டா கனெக்ட் 2023 நிகழ்வின்போது மெட்டாAI என்ற செயற்கை தொழில்நுட்ப மெய் நிகர் உதவியாளரை(AI assistant ) உருவாக்கியது. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி மற்றும் OpenAI நிறுவனத்தின் ChatGPT போன்றவற்றிற்கு போட்டியாக மெட்டா நிறுவனம் இதை அறிமுகம் செய்தது.
Meta AI என்பது ஒரு பொது நோக்கத்திற்கான செயற்கை நுண்ணறிவு கொண்ட அசிஸ்டன்ட் ஆகும். இது கேள்விகளுக்கு பதில் அளிப்பது, கட்டுரைகளை எழுதுவது, மொழிபெயர்ப்பது, படங்களை உருவாக்குவது போன்ற பல்வேறு பணிகளில் பயனர்களுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்துள்ளது.
முன்னதாக மெட்டா நிறுவனம் மைக்ரோசாப்ட் பிங்(Bing) உலாவியுடன் (browser) கூட்டு சேர்ந்து பணியாற்றுவதாக அறிவிக்கப்பட்டன. இதனைக் கொண்டு பயனர்கள் நிகழ் நேர தகவல்கள் தகவல்களை அணுகவும், படங்களை உருவாக்கவும் முடியும் என்று சோதித்து காட்டப்பட்டது.
2023 நவம்பரில் பல அமெரிக்க பயனர்கள் AI சேட் பாட் அணுக்களை பெற்றனர். ந்த சோதனைகள் எல்லாம் முடிந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் எக்ஸ் தளம், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயல்கள் மூலம் இந்திய பயனர்கள் மெட்டாAI சாட் பாட்டை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்போதும் இது சோதனை கட்டத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எப்படி பயன்படுத்துவது?வாட்ஸ் ஆப் செயலியில் புதிய செய்தி என்பதற்கு அருகிலேயே இந்த மெட்டா குறியீடு உள்ளது. அதை கிளிக் செய்தவுடன் ஒரு புதிய சேட் திறக்கும். அதில் நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு உகந்த பதில்களை செயற்கை நுண்ணறிவு உங்களுக்கு சொல்லும். சந்தேகம், கேள்விகள் போன்றவற்றை நீங்கள் கேட்டால் அதற்கான பதில்களை அது தரும். உங்களுக்காக உங்கள் ரெஸ்யூமை கூட அதுவே தயார் செய்து கொடுக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா? ட்ரை பண்ணி பாருங்க
அது மட்டும் இல்லாமல் உங்கள் வாட்ஸ் ஆப் குரூப் சாட் மற்றும் தனிப்பட்ட சார்களில் கூட இந்த மெட்டாAI உதவியை பெறலாம் என்று whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட அல்லது குழு அரட்டைகளில் இருந்தாலும், தனிநபர்கள் செய்தி புலத்தில் "@" என்பதைத் தொடர்ந்து "Meta AI" என தட்டச்சு செய்வதன் மூலம் Meta AI இன் செயல்பாட்டைத் தொடங்கலாம்.
ஆனால் இது தற்போது குறிப்பிட்ட நாடுகளில் உள்ள பயனர்களுக்கு மட்டும் செயல்பட்டு வருகின்றன. மேலும் இது ஆங்கிலத்தை மட்டுமே உள்ளீடாக எடுத்துக் கொள்ளும். மற்ற மொழிகளை எடுத்துக் கொள்ளும் வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை
கடந்த வாரம், மெட்டா நிறுவனம் மெட்டா AI இன் அப்டேட்டட் வெர்ஷன் லாமா 3ஐ அறிமுகம் செய்துள்ளது. மேம்படுத்தப்பட்ட மெட்டா AI ஆனது, மெட்டாவின் செயலிகள் மற்றும் ஸ்மார்ட் கண்ணாடிகள் பயன்படுத்தும் பயனர்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அணுகலை நெறிப்படுத்த, Meta ஆனது அதன் AI அசிஸ்டன்ட் ஆப்ஷனை வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மெசஞ்சர் போன்ற முக்கிய பயன்பாடுகளின் தேடல் செயல்பாடுகளுடன் ஒருங்கிணைத்துள்ளது.
இதை பற்றி பேசும்போது "நாங்கள் எங்களின் புதிய அதிநவீன Llama 3 AI மாடலுடன் Meta AI ஐ மேம்படுத்துகிறோம், இதை நாங்கள் ஓப்பன் சோர்சிங் செய்கிறோம். இந்த புதிய மாடலின் மூலம், Meta AI இப்போது நீங்கள் சுதந்திரமாகப் பயன்படுத்தக்கூடிய மிகவும் புத்திசாலித்தனமான AI உதவியாளராக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். " என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறினார்
No comments:
Post a Comment