மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
ஏழைப் பெண்கள் பயனடையும் வகையில், தமிழக அரசு மாதம் தலா ₹1,000 வழங்கி வரும் நிலையில், சிலருக்கு அந்தத் தொகை கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்தது. இது குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், தேர்தல் முடிந்ததும் விடுபட்டவர்களுக்கும் மாதம் ₹1,000 வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment