Join THAMIZHKADAL WhatsApp Groups
தேர்தல் பயிற்சி வகுப்புகளில் முழுமையாக பங்கேற்காத அலுவலர், ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
லோக்சபா தொகுதி தேர்தலில் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்., 7 ல் இரண்டாம் கட்ட பயிற்சி நடக்க உள்ளது. அன்றைய தினம் காலை முதல் மாலை வரை தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கும். இதற்காக காலை, மாலையில் இரு நேரங்களிலும் வருகை பதிவு செய்யப்படும். தேர்தல் கமிஷன் விதிப்படி பயிற்சி வகுப்புகளில் முழுமையாக பங்கேற்காத அலுவலர், ஆசிரியர்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment