Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 25, 2024

கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படும் 'கியூட்' மற்றும் யு.ஜி.சி. நெட் தேர்வை வெவ்வேறு பாடங்களுக்கு வெவ்வேறு நாளில் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தும்.

அப்போது ஒரு தேர்வரின் மதிப்பெண் மற்றொரு தேர்வரின் மதிப்பெண்ணுடன் ஒப்பிடும் வகையில் மதிப்பெண்களை சமன்படுத்தும் (நார்மலிசேசன்) முறை பின்பற்றப்படுகிறது. இதற்கு தேர்வர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இது இந்த ஆண்டு நீக்கம் செய்யப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்தார். கியூட் நுழைவுத் தேர்வு வருகிற மே 15 முதல் 24ம் தேதி வரையிலும், யு.ஜி.சி. நெட் தேர்வு ஜூன் 16ம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News