Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 14, 2024

மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் மற்றும் அட்டவணையாளரின் பணிகள் மற்றும் பொறுப்புகள்

மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் மற்றும் அட்டவணையாளரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் :

1. மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் மற்றும் அட்டவணையாளர் ஆகியோர் முகாம் அலுவலர் பொறுப்பேற்கும் அன்றே பொறுப்பேற்கும் வகையில் பாடவாரியாக முகாம் அலுவலரால் நியமிக்கப்படுவர்.

2. மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் அட்டவணையாளர் உதவியுடன் அனைத்து விடைத்தாள்களிலும் உள்ள மதிப்பெண்களை பக்க வாரியான கூடுதல் (Pagewise Total), வினாவாரியான கூடுதல் (Questionwise Total) விடைத்தாளின் மேற்புறத்தில் எடுத்தெழுதப்பட்டது மற்றும் பகுதி-ஆ (Part-B) இல் எழுதப்பட்டது ஆகியவற்றினைச் சரிபார்த்து கட்டில் உள்ள பகுதி-ஆ (Part-B) பகுதியைக் கட்டு எண், உறை எண், வரிசை எண் என வரிசையாக அடுக்கி சுருக்க விவரத்தாளை (DocketSheet) மேல் வைத்து இடது மூலையில் தைத்து சுருக்க விவரத்தாளில் (DocketSheet) மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் மற்றும் அட்டவணையாளர் கையொப்பமிட வேண்டும். இவர்கள் பகுதி-ஆ (Part-B) கையொப்பமிடவேண்டிய அவசியமில்லை (ஒரு கட்டுக்கு ஒரு சுருக்க விபரத்தாள் (DocketSheet) இருக்க வேண்டும்.

3. மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர் அன்றைய தினமே சுருக்க விவரத்தாள் (Docket sheet) வைத்து தைக்கப்பட்ட பகுதி-ஆ (Part-B) கட்டினை முகாம் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பகுதி-ஆ (Part-B) க்கு வரிசை எண் 1, 2, 3 என்று தொடங்கி 72/48 வரிசை எண்கள் வழங்கப்பட வேண்டும். மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாட்கள் மந்தண அறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

4. உயிரியல் பாடத்தைப் பொறுத்த வரையில் மதிப்பெண்கள் கணினியில் பதியும்பொழுது பகுதி-ஆ (Part-B) மதிப்பெண் அட்டவணையின் கீழ் தனியாக எண்ணாலும், எழுத்தாலும் எழுதப்பட்ட முழுமையாக்கப்பட்ட மொத்த மதிப்பெண்ணை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.

5. சுருக்க விவரத்தாளுக்கு (Docket sheet) உரிய பதிவினைத் தேதி வாரியாக, பாட வாரியாக, பயிற்று மொழி வாரியாக உரிய பதிவேட்டில் அன்றைய தினமே பதிந்து முகாம் அலுவலர் ஒப்பம் பெறவேண்டும்.

No comments:

Post a Comment