Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 24, 2024

பி.இ மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம்.! முழு விவரம்

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி முடிவடைந்தது.

தமிழகத்தில் 12 ஆம் பொது தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியினை ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆசிரியர்கள் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு பதிவு காரணமாக மேல்நிலை பொதுத் தேர்வுக்கான மதிப்பீட்டு பணி நடைபெறுவதில் தாமதமானது. ஏப்ரல் 22ஆம் தேதி அன்று மதிப்பீட்டுப் பணி நடைபெற்றது

2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மே மாதம் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 6-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியானவுடன் பி.இ. மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும்‌ பொறியியல்‌ கல்லூரிகள்‌, அண்ணா பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அதன்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌, அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு நடைபெறும். முதலாம் ஆண்டு பி.இ பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் மாணவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment