தமிழகத்தில் பட்டாவில் பெயர் மாற்ற ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை, கோவை உள்பட்ட பல்வேறு நகரங்களில் வீடு மனை விற்பனை அதிகரித்துள்ளது.
இதனால் வீடு மனைக்கான பத்திரம் மாற்றுவோர் கையோடு பட்டாவில் பெயர் மாற்றம் செய்து கொள்கிறார்கள். இதற்கான விண்ணப்பங்கள் கடந்த சில ஆண்டுகளை விட தற்போது அதிகரித்துள்ளது என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கான நிலவியர்கள் போதிய அளவில் தமிழகத்தில் இல்லாததால் இதன் பணிகள் தொய்வடைந்து உள்ளதாக தெரிகிறது.
ஒரு நிலத்தை பட்டா பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு அந்த நிலத்தை அளக்க வேண்டியது சர்வேயர் எனப்படும் நிலஅளவையரின் பணியாகும்.. பொதுவாக ஒரு நிலம், வீட்டு மனைகளாக மாற்றப்படும் போது, பல்வேறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. அப்படி பல்வேறு பாகங்களாக மாற்றப்படும் நிலங்களாக உட்பிரிவு பட்டாவாக கணக்கிடப்படும். அந்த உட்பிரிபு பட்டா கோரி மக்கள் விண்ணப்பிக்கிறார்கள். இதனை சம்பந்தப்பபட்ட ஊராட்சியின் அல்லது நகராட்சியின் நில அளவையாளர் நேரில் சென்று அளந்து, எல்லைகளை வரையறுக்க வேண்டும்.
இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது பல்வேறு பகுதிகளில், குறுவட்ட நிலையில் நில அளவர்கள் இருக்கிறார்கள்.கிராமத்துக்கு ஒருவர் வீதம் நில அளவர் இருந்தால் மட்டுமே, இப்பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்ற நிலை இருக்கிறது. நிலத்தை அளக்கும் நில அளவையர்கள் போதிய அளவில் இல்லாமல் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.
நில அளவையர் பணியாளர் பற்றாக்குறை காரணமாக, நில அளவை பணியில் உரிமம் அடிப்படையில், வெளியாட்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டிரக்கிறது.. இதற்காக, கட்டுமான பொறியியல் பட்டதாரிகளுக்கு, நில அளவை பணி குறித்த பயிற்சி அளித்து, உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, 1,231 பேருக்கு நில அளவை பணிக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், தாலுகா அளவில் பணி புரிய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். உட்பிரிவு கோரி வரும் கோப்புகளில், சம்பந்தப்பட்ட நிலத்தை அளக்க இவர்கள் பயன்படுத்தப்படுவர் என்று அரசு அதிகாரிகள் கூறினார். முடிக்கப்படும் கோப்புகள் எண்ணிக்கை அடிப்படையில், இவர்களுக்கான தொகை வழங்கப்படுவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
No comments:
Post a Comment