Thursday, April 4, 2024

மாரடைப்பு அறிகுறிகள் எத்தனை நாட்களுக்கு முன் தோன்றும்? -நிபுணர் விளக்கம்

மாரடைப்பு திடீரென்று தோன்றினாலும், சில நாட்களுக்கு முன்பே உடலில் அறிகுறிகள் தோன்றுகிறது. இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்துகொள்வதன் மூலம், தனிநபர்கள் தங்கள் இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, உயிருக்கு ஆபத்தான நெருக்கடி ஏற்படுவதை தடுக்கலாம்.

சமீபத்தில் வெளியான மருத்துவ ஆராய்சியின் படி, மாரடைப்பு ஏற்படுவதற்கு சுமார் 4 முதல் 6 நாட்களுக்கு முன்பு உடலில் அறிகுறிகள் தோன்றுகிறது. உடலில் ஏற்படும் அசாதாரண சோர்வு ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம். மாரடைப்பு பாதிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் நபருக்கு ஒவ்வொரு நாளின் இறுதியிலும் அதிகளவில் சோர்வாக காணப்படுவார்கள் என சொல்லப்பட்டுள்ளது.

அப்படி சோர்வு ஏற்படும் போதெல்லாம் குட்டி தூக்கம் போடுவது, குளிப்பது மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிவித்துள்ளனர். ஒருவரின் உடலில் உள்ள சோர்வை போக்குவதன் மூலம் மாரடைப்பை தடுக்கலாம்.

வயிற்று குமட்டல், வயிற்று பகுதியில் ஏற்படுகின்ற திடீர் வீக்கம், அடி வயிற்று வலி அல்லது வயிற்று பகுதி முழுவதும் வலி போன்றவை ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். தொடர்ச்சியாக சில மணி நேரங்களுக்கு மேல் இந்த வயிற்று வலி இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும், ஒருவர் மூச்சு விடுவதிலும், சுவாசிப்பதிலும் சிரமப்பட்டாளோ, தூங்குவதற்கு சிரமப்படுவது, தூக்கத்திலிருந்து திடீரென விழிப்பது, போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாளோ மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News