மார்ச் / ஏப்ரல் 2024 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வு தொடர்பாக கல்வி மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு முகாம்களில் தங்கள் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப விடைத்தாட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவ்வெண்ணிக்கைக்கு தக்கபடி மதிப்பீட்டுப் பணியை செய்து முடிக்க தேவையான ஆசிரியர்களின் எண்ணிக்கையினை சரியாகக் கணக்கிட்டு பாடவாரியான / பயிற்று மொழிவாரியான ஆசிரியர்களை உடனடியாக பணிவிடுவிப்பு செய்து முகாம் பணிக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் , தமிழ் வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் தமிழ்வழி விடைத்தாட்களையும் , ஆங்கில வழியில் போதிக்கும் ஆசிரியர்கள் ஆங்கிலவழி விடைத்தாட்களை மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றத்தக்க வகையில் , தங்கள் மாவட்டத்தில் அமையும் மதிப்பீட்டு முகாமில் பெறப்படும் பயிற்றுமொழி வாரியான விடைத்தாள்களின் எண்ணிக்கைக்கு தக்க விகிதத்தில் ஆங்கிலம் , தமிழ் வழிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை கணக்கிட்டு நியமனம் செய்து அனுப்பிட வேண்டும் .
SSLC Camp Letter - Download here
No comments:
Post a Comment