மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவருவதாகவும் , அது பள்ளி நிர்வாகத்திற்கு இடையூறாக உள்ளதாகவும் அறிக்கை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகங்களை உடனடியாக பள்ளி வளாகத்திற்கு வெளியே ஏதேனும் ஒரு வாடகைக் கட்டிடத்திற்கு இடம் மாற்றம் செய்து , அதற்கு பொதுப்பணித்துறையால் நிர்ணயம் செய்யப்படும் வாடகையினை நிர்ணயம் செய்து கொள்ளவும் அதற்கான கருத்துருவினை 30.04.2024 க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்கள் பள்ளிக் கட்டிடங்களில் செயல்படவில்லை என்பதை கண்டிப்பாக உறுதி செய்தல் வேண்டும் என்றும் , இல்லையெனில் மேற்காணும் பணியினை செயலாக்கம் செய்யப்படவில்லை என்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
எனவே பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் இயங்கி வரும் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்களை பொதுபணித்துறை நிர்ணயிக்கும் வாடகையின் அடிப்படையில் உடனடியாக இடம் மாற்றம் செய்து விட்டு அதன் அறிக்கையினை 10.04.2024 க்குள் இவ்வியக்ககத்திற்கு அனுப்புமாறும் மற்றும் வரும் கல்வி ஆண்டில் , பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் எந்த ஒரு முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / மாவட்டக் கல்வி அலுவலகங்களும் செயல்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறது
பள்ளி வளாகத்தில் செயல்படக்கூடிய கல்வி அலுவலகங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய அரசு உத்தரவு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் கடிதம்
CEOs & DEOs Offices in School Buildings Proceedings - Download here
No comments:
Post a Comment