உடல் பருமனால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது,அதிகப்படியான மன அழுத்தம்,உடலில் நோய் இருத்தல் போன்ற காரணங்களால் உடல் எடை மளமளவென அதிகரித்து விடுகிறது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள தவறினால் முதுமை காலத்தில் பல்வேறு நோய் பாதிப்பிற்கு ஆளாகும் நிலை ஏற்படும்.
ஒரு சிலர் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி,நடைபயிற்சி,டயட் செய்வார்கள்.ஆனால் அதையும் ஒரு சில நாட்கள் மட்டுமே கடைபிடிப்பார்கள்.ஆனால் உடல் எடையை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்திய குறிப்பை பின்பற்றினால் சில தினங்களில் பலன் கிடைக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:-
1)பட்டை
2)பிரியாணி இலை
3)தேன்
4)ஏலக்காய்
5)இஞ்சி
6)தேன்
7)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு பிரியாணி இலை,ஒரு துண்டு பட்டை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அதன் பின்னர் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.
அதேபோல் ஒரு ஏலக்காயை இடித்து அதில் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் கட்டுக்கோப்பாக இருக்கும்.
No comments:
Post a Comment