நம் தேசத்தில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம்.இதில் இருந்து பாதுகாத்துக் கொள்ள இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம்.
ஒருவேளை இரத்தத்தில் உள்ள சர்க்கரை மீறினால் அதை கட்டுக்குள் வைக்க முருங்கை இலையுடன் மேலும் 4 இலைகளை அரைத்து டீ போட்டு குடித்து வரவும்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை இலை
2)அகத்தி கீரை
3)வேப்பிலை
4)கறிவேப்பிலை
5)கொய்யா இலை
இந்த ஐந்து இலைகளையும் சம அளவு எடுத்து வெயிலில் உலர்திக் கொள்ளவும்.உதாரணத்திற்கு முருங்கை இலை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டால் இதர இலைகள் ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை:-
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்துக் கொள்ளவும்.
இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து பொடி செய்து கொள்ளவும்.பிறகு ஒரு ஜல்லடையில் அரைத்த பொடியை கொட்டி சலித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு இதை ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் மூலிகை தேநீர்:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் தயாரித்த மூலிகை இலை பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வந்தால் சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.
No comments:
Post a Comment