Monday, April 22, 2024

கற்றாழை வீட்டில் வளர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்

கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை.கற்றாழை செடியை வீட்டில் வளர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.

மருத்துவ குணம் நிறைத்த கற்றாழையை பலரும் வீட்டில் வலது வருகின்றனர்.
கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். கற்றாழை வழக்கமான குடல் செரிமானத்தை ஊக்குவிக்கிறது.மேலும் வீக்கத்தைக் குறைத்து கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது.
கற்றாழை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன .கற்றாழை ஆன்மிக ரீதியாகவும் எதிர்மறையான விஷயங்களில் இருந்து தள்ளி வைக்கப்படுகிறது என நம்பப்படுகிறது.
கற்றாழை ஜெல் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.கற்றாழை தோலை நீக்கி அதில் உள்ள ஜெல்லை உண்ணலாம்,ஜுஸாக குடிக்கலாம்,ஜெல்லை சருமத்தில் தடவினால் தோல் பிரகாசமாக வைகைக்கும்.
கற்றாழையில் வைட்டமின் ஏ, சி, ஈ ஆகியவை சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது .கற்றாழை ஜெல் முகப்பருவை எதிர்த்து செயல்படுகிறது .கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை குறையலாம் .
கற்றாழை சாறு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம், ஃப்ரீ ரேடிக்கல்கள், புற ஊதா சேதம் போன்ற எதிர்மறை பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது. புற்றுநோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News