வாட்ஸ்அப்பில் இன்டர்நெட் இல்லாமல் போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாக உள்ளது .
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் இணைய இணைப்பின்றி மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது. வாட்ஸ்அப்பில் இன்டர்நெட் இன்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரலாம். இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என தெரிகிறது.
இந்த அம்சம் ப்ளூடூத் துணையுடன் செயல்படும். ஆஃப்லைன் ஃபைல் ஷேரிங் அம்சத்தை பயனர்கள் அப்டேட் செய்திருந்தால் மட்டுமே ஃபைல்களை அனுப்பவும், பெறவும் முடியும். அதற்கான பர்மிஷனை பயனர்கள் அனுமதி கொடுக்க வேண்டியதும் அவசியம். விரைவில் இந்த வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment