தமிழகத்தில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது .அதன் ஒரு பகுதியாக தற்போது ஹெல்ப்லைன் வசதி போன்ற அனைத்து வசதிகளையும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் மாணவர் சேர்க்கை:
2024-25 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தேர்தல் பணிகளை முன்னிட்டு முன்கூட்டியே தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் 5.5 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பள்ளி கல்வித்துறையின் தற்போதைய மாற்றங்கள் டிஜிட்டல் வகுப்புகள் ஆங்கில வழி பாடங்கள் என அனைத்தையும் விளக்கி பெற்றோர்களுக்கு எடுத்துக் கூறி தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
இதில் குறிப்பாக சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அதிகப்படியான மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். குறைவாக நீலகிரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு காரணம் என்னவென்று கேட்டால் பல பெற்றோர்களுக்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தெரியவில்லை.
மேலும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி முறை எங்கெங்கு உள்ளது பற்றிய விவரங்களும் மாணவர்களை பள்ளியில் சேர்க்க தேவையான ஆவணங்கள் பற்றிய விவரங்கள் போன்ற அனைத்து விவரங்களையும் சில ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு தெரிவிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இதனால் ஹெல்ப்லைன் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
கடந்த 10 நாட்களில் மட்டும் 40 ஆயிரம் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளனர். இந்த தொடர் நடவடிக்கைகளால் இந்த ஆண்டு அதிகமான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment