கோடை காலத்தில் உடலுக்கு நீர்ச்சத்து மிகவும் அவசியமான ஒன்று. புதினா இலை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி குடல் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.
கோடை காலத்தில் ஏன் அவசியம் புதினா நீரை சேர்க்க வேண்டும் என உங்களுக்கு தெரியுமா ?
செரிமானம் மோசமாக இருந்தால் உடல் எடையை எளிதில் குறைக்க முடியாது. இது மெடபாலிஸத்தை மெதுவாக்கி வயிற்றில் அசௌகர்யத்தையும், வாய்வுத் தொலையையும் உண்டாக்கலாம். புதினா இலை அஜீரணம், வாய்வு, வயிறு உப்புசம் போன்ற செரிமானப் பிரச்சனைகளை குணப்படுத்தும் ஆற்றல் நிறைந்தது.
புதினா இலை இயற்கையாகவே பசியை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. அதனால் உடல் எடை குறைப்பது எளிதாகிவிடுகிறது. கட்டாயம் புதினா நீரை பருகுங்கள்.
எடை குறைப்பதற்கு உடலில் நீரோட்டம் சமநிலையில் இருக்க வேண்டும். புதினா நீர் தாகத்தை மட்டும் தீர்க்காமல் நாள் முழுவதும் உடலில் தேவையான நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்கிறது.
செரிமான நொதிகளை தூண்டக்கூடிய திறன் புதினா இலைகளுக்கு உள்ளது. இது மெடபாலிஸத்தை வேகப்படுத்தி கலோரிகளை குறைக்க சிறந்த முறையில் உதவுகிறது. அதனால் உடல் எடை எளிதாக குறைவதற்கு வழிவகை செய்கிறது.
புதினா நீர் ஒரு இயற்கை நச்சு நீக்கியாக செயல்படுகிறது. புதினா நீர் பருகுவதால் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய வழிசெய்கிறது.உடல் எடை குறைப்பிற்கு இதுவும் ஒரு உதவியாக இருக்கிறது.
No comments:
Post a Comment