பள்ளி வேலை நாள் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.
இது தொடர்பாக மதிப்புமிகு. தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களிடம் பேசிய அடிப்படையில் ஏற்கனவே இயக்குநர்களால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ளபடி 12.04.2024 முடிய பள்ளி செயல்படும்.
13.04.24 முதல் தேர்தல் பணிகளுக்காக பள்ளி விடுமுறை.
அதன்பின் 22.04.24 முதல் 26.04.24 முடிய மீண்டும் பள்ளி செயல்படும். 2023--2024 ஆம் கல்வி ஆண்டின் இறுதி வேலைநாள் 26.04.2024 ஆகும் தற்காலிக ஆசிரியர்களைப் பொறுத்தவரை அவர்களும் 26.04.24 முடிய பள்ளிக்கு வருகைதர வேண்டும்.
அ. வின்சென்ட் பால்ராஜ்
பொதுச்செயலாளர்
தமிழக ஆசிரியர் கூட்டணி
No comments:
Post a Comment