Join THAMIZHKADAL WhatsApp Groups

இன்றைய உலகில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வண்ணம் உள்ளது.உணவு பழக்க வழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் சர்க்கரை நோயில் இருந்து எளிதில் தப்பித்து விடலாம்.
ஆனால் சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை குணமாக்குவது அவ்வளவு எளிதல்ல.ஆகையால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள கோவைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கோவைக்காய்
2)இஞ்சி
3)சீரகம்
4)உப்பு
5)மிளகு
6)மோர்
செய்முறை:-
1/4 கிலோ கோவைக்காயை வட்ட வடிவில் மெல்லியதாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் 1 கப் மோர் சேர்த்து கலந்து விடவும்.
அதன் பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி சீரகம் மற்றும் 1/4 தேக்கரண்டி மிளகு சேர்த்து மிதமான தீயில் வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
பிறகு சிறு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.அரைத்த சீரகம்,மிளகு பொடியை கோவைக்காயில் கலந்து விடவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கும் கோவைக்காய் பச்சடி தயார்.இதை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
No comments:
Post a Comment