இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனிநபர் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
காப்பீடுகள் பல வகை என்றாலும் நமக்கு மிகவும் முக்கியமான மற்றும் அவசர நிலையில் உதவுவது மருத்துவ காப்பீடு தான். இன்று இருக்கும் சூழலில் பல நிறுவனங்கள் நமக்கு மருத்துவ காப்பீடு வழங்கி வருகிறது. பாலிசி கவரேஜ் என ரூ. 5 லட்சம், ரூ.10 லட்சம் என கோடி ரூபாய் வரை காப்பீடு கிடைப்பது உண்டு. தற்போது மருத்துவ காப்பீடு பெறுவதற்கான புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ காப்பீடு:
ஏப்ரல் 1, 2024 முதல் மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளை வாங்குவதற்கான வயது வரம்பை இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) நீக்கியுள்ளதால், இப்போது 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிய மருத்துவ காப்பீட்டுக் கொள்கைகளை வாங்க முடியும் என்று தெரிவித்துள்ளது. காப்பீட்டாளர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள், குழந்தைகள், மகப்பேறு மற்றும் தகுதிவாய்ந்த ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட வேறு எந்தக் பிரிவிற்கும் இந்த மருத்துவக் காப்பீட்டு வழங்கப்படும்.
வயது தடையில்லை:
முன்னதாக, 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் பாலிசிகளை வாங்க முடியாது. ஆனால், ஏப்ரல் 1, 2024 முதல் நடைமுறைக்கு வந்துள்ள மாற்றங்கள், வயதைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு தனிநபரும் உடல்நலக் காப்பீட்டுக் கொள்கையை வாங்குவதற்குத் தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் இந்தப் புதிய முடிவு, இந்தியாவில் சுகாதாரப் பாதுகாப்புச் சூழலை மேம்படுத்துவதற்கும், , காப்பீட்டு வழங்குநர் நிறுவனங்களைத் தங்கள் சலுகைகளைப் பன்முகப்படுத்த ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுகாதார கொள்கைகள்:
தற்போதைய அறிவிப்பின் படி, பாலிசிதாரர் முதலில் அவருக்கு இருக்கும் உடல்நலக் குறைபாடுகளை வெளிப்படுத்தினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், ஏற்கனவே இருக்கும் அனைத்து நிபந்தனைகளும் 36 மாதங்களுக்குப் பிறகு பாதுகாக்கப்பட வேண்டும் அதாவது காப்பீட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இந்த 36 மாதங்களுக்குப் பிறகு ஏற்கனவே இருக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் க்ளைம்களை நிராகரிப்பதில் இருந்து சுகாதார காப்பீட்டாளர்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைச் செலவுகளை ஈடுசெய்யும் இழப்பீட்டு அடிப்படையிலான சுகாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதில் இருந்து தடைசெய்யப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, அவை நன்மை சார்ந்த கொள்கைகளை வழங்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment