SSA AZ தலைப்பு - 7979 பணியிடங்களுக்கான (G.O.Ms.No.175, Dated: 18.09.2006) தொடர் நீட்டிப்பு ஆணை ஏப்ரல் - 2024 மாதத்திற்கு வந்து விட்டதா? இதோ அதற்கான பதில்.....
முன்பெல்லாம் இது போன்று பள்ளிக் கல்வி இயக்குநரால் மூன்று மாதங்களுக்கு ஊதியம் வழங்கும் சான்றிதழ் வெளியிடும் போது முதல் பக்கத்தில் பார்வை 1ல், பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்ட அரசாணையும், பார்வை 2ல் அந்தப் பணியிடங்களுக்கு கடைசியாக வழங்கப்பட்ட தொடர் நீட்டிப்பிற்கான அரசாணையும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அது போல 2ஆம் பக்கத்தில் சான்றிதழ் வழங்கும் அட்டவணையில் பணியிடத்தின் பெயர், பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட அரசாணை எண் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் தற்போது இந்த ஆண்டு முதல், ஊதியம் வழங்கும் சான்றிதழில் இரண்டு இடங்களிலும் பணியிடத்திற்கு கடைசியாக தொடர் நீட்டிப்பு வழங்கிய அரசாணை எண் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பணியிடம் தோற்றுவிக்கப்பட்டதற்கான அரசாணை எண்ணை குறிப்பிடுவதில்லை.
எனவே கடைசியாக தொடர் நீட்டிப்பு வழங்கிய அரசாணை எண்ணை தெரிந்து கொண்டு, தற்போது வழங்கப்படும் ஊதியம் வழங்கும் சான்றிதழ் நமக்குரியது தான் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
புரிதலுக்காக சென்ற முறை தொடர் நீட்டிப்பு வழங்கிய அரசாணையும் இணைக்கப்பட்டுள்ளது. (ஒருவேளை) கருவூலத்தில் மறுப்பு தெரிவித்தால் இரண்டு ஆணையையும் இணைத்துக் கொடுங்கள்!!!
தகவலின் பொருட்டு...
ந.பழனிச்செல்வம்,
முதுகலை ஆசிரியர் (வணிகவியல்),
அரசு மேல்நிலைப் பள்ளி, ஹைவேவிஸ் (மேகமலை),
தேனி - மாவட்டம்.
No comments:
Post a Comment