12 ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் நகல்
மார்ச் 2024 ம் ஆண்டு 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் விடைத்தாள் நகலை மே 28 ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் ; மறுகூட்டல் , மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க மே 29 ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் ஜூன் 1 ம் தேதி மாலை 5 மணி வரை , அந்தந்த மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை அதற்கான கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும்
மார்ச் 2024 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகலினை 28.05.2024 ( செவ்வாய்க்கிழமை ) பிற்பகல் 2.00 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Notification- பகுதியில் HSE Second Year Exam , March 2024 - Scripts Download " என்ற வாசகத்தினை " Click " செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
HSE II YEAR SCAN COPY DOWNLOAD AND REVALUATION RETOTAL II APPLICATION PRESS NOTIFICATION👇
No comments:
Post a Comment