Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 14, 2024

வைகாசி 2024 மாதப் பலன்கள் - மீனம்

கிரகநிலை:

ராசியில் செவ்வாய், ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சுக் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர், குரு - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

கிரகமாற்றங்கள்:

20-05-2024 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

24-05-2024 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

31-05-2024 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

09-06-2024 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-06-2024 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

தூய உள்ளம் படைத்த மீன ராசியினரே நீங்கள் எதிலும் நியாயமும், நேர்மையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். ஆனால் கவனமாக இருப்பது நல்லது.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது.

பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.

பூரட்டாதி - 4:

இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

உத்திரட்டாதி:

இந்த மாதம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது அவசியம்:

ரேவதி:

இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.

பரிகாரம்: விநாயகரை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்;

சந்திராஷ்டம தினங்கள்: மே 26, 27

அதிர்ஷ்ட தினங்கள்: மே 18, 19, 20

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News