பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். அதிலும் அக்னி நட்சத்திர காலத்தில் சற்று அதிகமாகவே காணப்படும்.
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் மே 04 ம் தேதியான இன்று முதல் துவங்குகிறது. இந்த ஆண்டு மே 04 ம் தேதி துவங்கி, மே 29 ம் தேதி வரை, அதாவது சித்திரை 21 துவங்கி வைகாசி 15 வரை அக்னி நட்சத்திரம் உள்ளது.
கத்திரி காலத்தில் செய்ய தகுந்தவை:
திருமணம், நிச்சியம், பெண்-மாப்பிள்ளை பார்த்தல், உபநயனம், பொது கட்டிடங்கள் (சத்திரங்கள், அரசு கட்டிடங்கள்) கட்டுதல், பரிகார ஹோமங்கள் போன்றவை செய்ய தகுந்தவையாகும்
கத்திரி காலத்தில் செய்யக்கூடாதவை:
மொட்டை அடித்தல், நிலம் தோண்டுதல், வீடு கட்ட துவக்கம், மரங்கள், செடிகள் வெட்டுவது, தோட்டம் அமைப்பது, விதை விதைத்தல், புதிய குடியிருப்பு பகுதி அமைப்பது(பிளாட் போடுவது) போன்றவை செய்யக்கூடாது
பூமி 23.5 பாகை சாய்வான நிலையில் சீரான அச்சில் சூரியனை நீள் வட்டபாதையில் சுற்றுகிறது அப்படி சுற்றும் பொழுது பூமியின் வடபுலம் (Northern Hemispheres)6 மாதங்களும் அடுத்து தென்புலம்(Southern Hemispheres)6 மாதங்களும் சூரியனின்ஒளி விழும் வகையில் உள்ளது நேராக சூரியன் விழும் காலம் கோடை என்றும், சாய்வாக சூரியனின்ஒளி விழும் காலம் குளிர் காலம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய மாற்றமே புவியின் பருவநிலை மாற்றத்தின்முக்கிய காரணியாகும். இதில் சூரியனின் கதிர் நேர்கோணத்தில் விழும் காலமே கத்திரி ஆகும். இக்காலத்தில் சூரியனின் மிக அதிக பட்ச வெப்பம் பூமியின் மீது தாக்கும்.
அக்னி நட்சத்திரம் துவங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை கர்பகிரகத்தில் சிவலிங்கத்தின் மீது தாரா பாத்திரம் எனும் கலம் தொங்கவிடப்பட்டு அதில் வெற்றி வேர் இட்டு, பன்னீர் நிரப்பி சொட்டு சொட்டாக பன்னீர் சிவலிங்கத்தின் மீது விழும் வகையில் அமைத்திருப்பார்கள். இதனால் அக்னிநட்சத்திரத்தில் சிவன் உக்கிரம் தனிந்து சாந்தமடைந்து பக்தர்களுக்கு அருளுவார் என்பது ஐதீகம்.
No comments:
Post a Comment