JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, May 13, 2024

CBSE +2 தேர்வு முடிவுகள் வெளியீடு முதலிடம் பிடித்தது கேரளா.

இந்தியா முழுக்க பொது பாடத்திட்டத்தை கொண்டுள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் +2ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் தற்போது இந்தியா முழுக்க வெளியாகியுள்ளது.

இந்த CBSC பாடத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து தேர்வு எழுதியவர்களின் ரிசல்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை result.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு நேரடியாக சென்று தங்கள் பதிவெண்களை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம். இந்திய முழுக்க ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 87.98 சதவீதம் ஆகும்.

பொது விவரங்கள் :

தேர்வெழுதிய மாணவர்கள் – 16,21,224.

தேர்ச்சி பெற்றவர்கள் – 14,26,420.

தேர்ச்சி விகிதம் – 87.98 %.

மாணவிகள் – 91.52 %.

மாணவர்கள் – 85.12 %.

95 சதவீதத்திற்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தவர்கள் – 24,068 மாணவர்கள்.

வெளிநாட்டு மாணவர்கள் :

தேர்வு எழுதியவர்கள் – 20,355.

தேர்ச்சி பெற்றவர்கள் – 19,508.

தேர்ச்சி விகிதம் – 95.84%.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் :

மத்திய திபெத்திய பள்ளி நிர்வாகம் CTSA – 99.23%.

நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகள் JNV – 98.90%.

கேந்திர வித்யாலயா பள்ளிகள் KV – 98.81%.

அரசு உதவி பெரும் பள்ளிகள் – 91.42%.

அரசு பள்ளிகள் – 88.23%.

சுயேச்சை பள்ளிகள் – 87.70%.

பிராந்தியம் வாரியாக டாப் லிஸ்ட் :

திருவனந்தபுரம் (கேரளா) – 99.91%.

விஜயவாடா (ஆந்திர பிரதேசம்) – 99.04%.

சென்னை (தமிழ்நாடு) – 98.47%.

பெங்களூரு (கர்நாடகா) – 96.95%.

டெல்லி (மேற்கு) – 95.64%.

டெல்லி (கிழக்கு) – 94.51%.

No comments:

Post a Comment